மென்டலின் ஸ்ரீநிவாஸ் காலமானார்(Video)

மென்டலின் ஸ்ரீநிவாஸ் காலமானார்(Video)

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 11:06 am

இசைக்கலைஞர் மென்டலின் ஸ்ரீநிவாஸ் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 45.

Srinivas4

1969-ம் ஆண்டு, ஆந்திர மாநிலம் பாலகோலில் ஸ்ரீநிவாஸ் பிறந்தார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

srinivas 1

மாண்டலின் ஸ்ரீநிவாசனுக்கு 1998ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2010-ல் சங்கீத நாடக அகடமி விருதினைப் பெற்றார். மிகப் புகழ் பெற்ற வித்துவானாகிய இவரது இழப்பு கர்நாடக இசை உலகிற்கு பேரிழப்பாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்