மூன்று வெவ்வேறு விபத்துக்களில் மூவர் பலி

மூன்று வெவ்வேறு விபத்துக்களில் மூவர் பலி

மூன்று வெவ்வேறு விபத்துக்களில் மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 10:10 am

கண்டி – குருநாகல் வீதியின் எல்தெனிய மற்றும் 6 ஆம் கட்டை பகுதிகளிலும், யக்கல – கிரிந்திவெல வீதியிலும் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகலில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கண்டி – குருநாகல் வீதியின் 6ஆம் கட்டை சந்திக்கருகில் இடம்பெற்ற வேறொரு வாகன விபத்தில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சொகுசு பஸ் ஒன்றுடன் மோதுண்டதை அடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்திற்குக் காரணமான சொகுசு பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர யக்கல கிரிந்திவெல வீதியில் இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்