மலையகத்திற்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

மலையகத்திற்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

மலையகத்திற்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 4:22 pm

மலையக ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இருவேறு பகுதிகளில் ரயில் மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கலபொட மற்றும் வட்டவளை ஆகிய ரயில் நிலையத்திற்கு இடையிலான மார்க்கத்தில் பாரிய கல் ஒன்று சரிந்து வீழ்துள்ளதால், பதுளைக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.

இதேவேளை , குறித்த பகுதியில் கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் சேவைக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அம்பேவெல ரயில்வே நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் அப்பகுதியிலும் ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று காலை பத்து மணி தொடக்கம் இவ்வாறானதொரு நிலைமை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ரயில் மார்க்கங்களில் காணப்படும் குளறுபடிகளை நிவர்த்தி செய்து போக்குவரத்தை வழமைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே பிரதான மார்க்கத்தின் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறு வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

இதனையடுத்து வழமையான கால அட்டவணைகளின் பிரகாரம் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமிக்ஞை கட்டமைப்பில் இன்று காலை ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக ரயில் பயணங்களில் தாமதம் நிலவியிருந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல வரையும், பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு கோட்டை வரையும் ரயில் சேவைகளில் தாமதம் நிலவியிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்