பிரித்தானியாவில் இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் எதிர்ப்பு

பிரித்தானியாவில் இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் எதிர்ப்பு

பிரித்தானியாவில் இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 11:27 am

தனி நாடாவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வெளியாகத் துவங்கியுள்ளன.

பெரும்பாலான மக்கள் பிரித்தானியாவில் இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் ஓர் அங்கமாக கடந்த 307 ஆண்டுகளாக நீடித்த ஸ்கொட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது.

ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு, அந்நாட்டிலேயே உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் உண்மையான நிலையறிய அங்கு நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் சுமார் 2,600 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 16 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். 86 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கெடுப்பு முடிவுகள் இன்று அதிகாலை முதல் வெளியாகத் துவங்கின. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே, பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது உறுதியாகியது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர், ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டுமென தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்