தேர்தல் சட்டமீறல்கள் 272ஆக அதிகரிப்பு; மொனராகலையில் அதிக முறைப்பாடுகள்

தேர்தல் சட்டமீறல்கள் 272ஆக அதிகரிப்பு; மொனராகலையில் அதிக முறைப்பாடுகள்

தேர்தல் சட்டமீறல்கள் 272ஆக அதிகரிப்பு; மொனராகலையில் அதிக முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 7:07 pm

ஊவா மாகாண சபைத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு இதுவரை 272 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மொனராகலை மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான 165 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 90 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதுதவிர பொதுவான 17 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் கூறியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்