தேர்தல் சட்டங்களை மீறிய 55 பேர் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு

தேர்தல் சட்டங்களை மீறிய 55 பேர் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு

தேர்தல் சட்டங்களை மீறிய 55 பேர் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 2:47 pm

ஊவா மாகாண தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள் குறித்து 55 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

எனினும், அண்மையில் பண்டாரவளையில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்