ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி-மஹிந்த தேசப்பிரிய

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி-மஹிந்த தேசப்பிரிய

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி-மஹிந்த தேசப்பிரிய

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 6:43 pm

நாளை நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை 832 மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

தேர்தலில் வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டுவருவது கட்டாயமானது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

வாக்களிப்பு தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக, தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்கும் தேசிய பிரிவு நாளை காலை 6.30 முதல் செயற்படவுள்ளது.

பதுளை மாவட்டத்திற்கான முறைப்பாடுகளை 0112 877 622 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், மொனராலை மாவட்டத்திற்கான முறைப்பாடுகளை 0112 877 622 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அறிவிக்க முடியும்.
இதேவேளை, நாளை இடம்பெறவுள்ள வாக்களிப்பில் பங்கெடுக்கும் வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்பகல் வேளையில் விடுப்பு வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டார்.

தேர்தல் வாக்களிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அந்தோனிப்பிள்ளை பத்னிநாதன் தெரிவித்தார்.

மஹியங்கனை தேர்தல் தொகுதியில் தம்பான பகுதியிலிருந்து ஆயிரத்து 32 ஆதிவாசிகள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதாக தேர்தல் தொடர்பான களஆய்வில் ஈடுபட்டிருந்த எமது அலுவலக செய்தியாளர் ஜூடின் சிந்துஜன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்