ஊவா மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

ஊவா மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

ஊவா மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 9:18 am

ஊவா மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளதால் தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் சி. நந்தா மெத்தீவ் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் மொனராகலை மாவட்டத்தில் ஒரு பாடசாலையும் வாக்கெண்ணும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு மாவட்டங்களிலிருந்தம் பல பாடசாலைகள் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக மற்றுமொரு நாள் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் இந்த விடயம் தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானிப்பார் என்றும் மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தேர்தல் பணிகளில் பல ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் மாகாணத்தின் சகல பாடசாலைகளும் இன்று மூடப்பட்டும் என மாகாண ஆளுநர் சி. நந்தா மெத்தீவ் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை மூடப்பட க்ஷேண்டும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அநாவசிய பிரச்சினைகளை தவிர்க்கும் முகமாக கலால் திணைக்களத்தால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்