ஆசிய நாடுகளது அரசியல் கட்சிகளின் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது

ஆசிய நாடுகளது அரசியல் கட்சிகளின் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது

ஆசிய நாடுகளது அரசியல் கட்சிகளின் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 9:03 am

ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளது மாநாடு கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொண்டு விசேட உரையாற்றவுள்ளார்.

ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாடு இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

ஆசிய வலயத்திலுள்ள சகல நாடுகளினதும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மாநாடு வருடந்தோறும் ஆசிய வலய நாடொன்றில் நடைபெற்று வருகின்றது.

ஆசிய வலய நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்