அக்மீமன சிறுமி துஷ்பிரயோக சந்தேகநபர் பலி

அக்மீமன சிறுமி துஷ்பிரயோக சந்தேகநபர் பலி

அக்மீமன சிறுமி துஷ்பிரயோக சந்தேகநபர் பலி

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2014 | 3:15 pm

அக்மீமன – ஜனபலகம பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவர் கடத்தி, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சந்தேகநபர் நேற்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சான்றுப் பொருட்களை கைப்பற்றுவதற்காக சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சந்தேகநபர் அருகிலுள்ள ஓடைக்குள் குதித்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இதனையடுத்து பொலிஸார் சந்தேநபரை மீண்டும் பிடித்து, கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்தபோது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்