ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக மலருமா?; வாக்கெடுப்பு இன்று

ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக மலருமா?; வாக்கெடுப்பு இன்று

ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக மலருமா?; வாக்கெடுப்பு இன்று

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2014 | 10:38 am

ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக மலர வேண்டுமா அல்லது பிரித்தானியாவுடன் ஒன்றிணைந்து இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக வேண்டுமா? என்ற கேள்விக்கு வாக்காளர்கள் பதில் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 இலட்சத்து 85 ஆயிரத்து 323 பேர் வாக்களிப்பதற்கென தம்மை பதிவுசெய்துள்ளதுடன், முன்னொருபோதும் இல்லாத வகையில் அதிகளவிலான மக்கள் வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் உள்ள 2,608 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள அதேவேளை முடிவுகள் நாளை மறுதினம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தின் அதிகாரம் அளிக்கப்பட்ட 32 நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் 7,8,924 பேர் தபால்மூல வாக்களிப்பதற்கென விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

ஸ்கொட்லாந்து வரலாற்றில் முதல் முறையாக அதிகளவிலான மக்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவு போட்டிமிக்கதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஸ்கொட்லாந்தின் பிரிவினைக்கு எதிரான தரப்பு சிறிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்