முதல் போட்டியில் வெற்றியை சுவைத்தது ஐபிஎல் நடப்பு சாம்பியன்

முதல் போட்டியில் வெற்றியை சுவைத்தது ஐபிஎல் நடப்பு சாம்பியன்

முதல் போட்டியில் வெற்றியை சுவைத்தது ஐபிஎல் நடப்பு சாம்பியன்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2014 | 10:47 am

சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ஐபிஎல் நடப்பு சாம்பியானான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மஹேந்திர சிங் தோனி 35 ஓட்டங்களையும், டுவைன் பிரவோ மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பியூஸ் சால்வா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

158 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஒட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஓர் கட்டத்தில் 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டை எதிர்நோக்கியிருந்தது.

எனினும் 6 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அன்று ரசல் மற்றும் ரெயான் டென் டொசட்டே ஆகியோர் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தினர்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அன்று ரசல் 25 பந்துகளில் 58 ஓட்டங்களையும் டொசட்டே 41 பந்துகளில் 51 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

அஷிஷ் நெஹ்ரா நான்கு விக்கெட்டுளைக் கைப்பற்றியதுடன் போட்டியின் சிறப்பாட்டக்காரராக அன்று ரசல் தெரிவுசெய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்