ஐஎஸ் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஆயுதங்களை வழங்கும் ஒபாமாவின் முடிவிற்கு அங்கீகாரம்

ஐஎஸ் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஆயுதங்களை வழங்கும் ஒபாமாவின் முடிவிற்கு அங்கீகாரம்

ஐஎஸ் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஆயுதங்களை வழங்கும் ஒபாமாவின் முடிவிற்கு அங்கீகாரம்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2014 | 12:44 pm

சிரியாவில் ஐஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அந்த நாட்டு எதிர்தரப்பிற்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கும் பரக் ஒபாமாவின் திட்டத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குடியரசு கட்சியினரின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதிநிதிகள் சபையில் இந்த திட்டம் அதிகளவு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளை செனட் சபையும் இதற்கு அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக்கில் தரைவழியாக அமெரிக்க படையினரை யுத்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்போவதில்லை என ஒபாமா மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஈராக்கில் கடந்த ஒகஸ்ட் மாத நடுப் பகுதியில் இருந்து ஐஎஸ் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து 174 விமானத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்