ஊவா தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்கு தொலைநகல், தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

ஊவா தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்கு தொலைநகல், தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

ஊவா தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்கு தொலைநகல், தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2014 | 4:08 pm

நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலின் வாக்களிப்பு தொடர்பிலான முறைப்பாடுகளை தொலைபேசி மற்றும் தொலைநகல் மூலம் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்கும் தேசிய பிரிவு நாளை மறுதினம் காலை 6.30 முதல் செயற்படவுள்ளது.

பதுளை மாவட்டத்திற்கான முறைப்பாடுகளை 0112 877 620 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும், 0112 877 622 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அறியத்தர முடியும்.

மொனராலை மாவட்டத்திற்கான முறைப்பாடுகளை 0112 877 621 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும், 0112 877 622 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அறிவிக்க முடியுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஊவா மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட அனைத்து அரசியற் கட்சி அலுவலகங்களையும் நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் அகற்றுமாறு தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசியற் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் நாளைமுதல் ஒரு அலுவலகத்தினை மாத்திரமே நடத்திச்செல்ல முடியுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் 34 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் 02 போனஸ் ஆசனங்களும் அடங்குகின்றன.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து 18 உறுப்பினர்களும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]st.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்