இறக்குவானையில் வீட்டிலிருந்தவர்களை கட்டி வைத்து பணம், தங்காபரணங்கள் கொள்ளை

இறக்குவானையில் வீட்டிலிருந்தவர்களை கட்டி வைத்து பணம், தங்காபரணங்கள் கொள்ளை

இறக்குவானையில் வீட்டிலிருந்தவர்களை கட்டி வைத்து பணம், தங்காபரணங்கள் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2014 | 3:16 pm

இறக்குவானை பாறவத்தை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தங்காபரணங்களும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், ஐவரடங்கிய குழுவொன்றே கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

வீட்டிலிருந்தவர்களை கட்டி வைத்துவிட்டு, 36 பவுண் தங்காபரணங்கள், 1,20,000 ரூபா பணம் மற்றும் மூன்று கையடக்கத் தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்