இரண்டரை வயது குழந்தையை கொலை செய்தவருக்கு 8 வருடங்களின் பின்னர் மரண தண்டனை

இரண்டரை வயது குழந்தையை கொலை செய்தவருக்கு 8 வருடங்களின் பின்னர் மரண தண்டனை

இரண்டரை வயது குழந்தையை கொலை செய்தவருக்கு 8 வருடங்களின் பின்னர் மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2014 | 4:54 pm

தனிப்பட்ட தகராறு காரணமாக கடந்த 2006ஆம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரண்டரை வயது குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட நபருக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த சம்பவம் 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்றதுடன், கடந்த எட்டு வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வியாபார ரீதியான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற சம்பவத்தில் குழந்தையொன்று கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் பதிவானது.

இதனையடுத்து இடம்பெற்ற வழக்கு விசாரணையில் கொலை முயற்சி, காயம் ஏற்படுத்தியமை, கொலை செய்தமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதிக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்