இயக்குனர் பாலா புகைப்படம் எடுக்க விரும்பிய அந்த நபர் யார்?

இயக்குனர் பாலா புகைப்படம் எடுக்க விரும்பிய அந்த நபர் யார்?

இயக்குனர் பாலா புகைப்படம் எடுக்க விரும்பிய அந்த நபர் யார்?

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2014 | 10:59 am

அர்ஜூன் இயக்கி, நடித்திருக்கும் புதிய படம் ஜெய்ஹிந்த்-2. அர்ஜுனுக்கு ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடித்துள்ளார். படத்தின் மைய கரு இன்றைய கல்விமுறையை மையப்படுத்தி எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்து சொல்லும் வகையில் உருவாகியுள்ளதாம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கானா பாலா, மனோபாலா, மயில்சாமி மற்றும் இயக்குனர் பாலா கலந்து கொண்டாலும் சிறப்பு அம்சமாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி, எல்லையில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரை அழைத்து கவுரவித்தார் அர்ஜூன். முகுந்த்தின் மனைவி இந்து, மகள் ஆர்சியா, முகுந்த் தந்தை மற்றும் தாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் பாலா பேசும்போது, இந்தப்படத்தின் விழாவுக்கு அர்ஜுன் என்னை அழைத்தபோது, விழாவில் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தார் கலந்து கொள்ள இருப்பதாக சொன்னார்.

இதனையடுத்து நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடன் வர சம்மதம் சொன்னேன். இதுவரை நான் எந்த ஒரு நடிகர், நடிகையருடனோ அல்லது வேறு சினிமாக்காரர்கள் உடனே புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டதில்லை, ஆனால் முகுந்த் குடும்பத்துடன் போட்டோ எடுத்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறி புகைப்படம் எடுத்து கொண்டார்.

இதைப்பார்த்த கோடம்பாக்கத்தினர் எந்த ஒரு நடிகர் கூடவும் புகைப்படம் எடுக்காத இந்த மனிதர் இவர்கள் கூட நின்று எடுத்திருப்பது அவரின் தேசபற்றை காட்டுகிறது என்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்