கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2014 | 9:00 pm

சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு நகரின் சில வீதிகளில் போக்குவரத்து நாளை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சில வீதிகளூடான போக்குவரத்து நாளை முற்பகல் 10.30 முதல், பிற்பகல் 1 மணிவரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி, பேஸ்லைன் வீதி, பௌத்தாலோக்க மாவத்தை, பம்பலப்பிட்டி முதல் காலிமுகத் திடல் வரையான காலி வீதி என்பவற்றில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாளை மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை கொள்ளுபிட்டி சந்தியிலிருந்து பழை பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலான காலி வீதி, லோட்டஸ் வீதி, வங்கி மாவத்தை, ஆகிய வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்