30 வருடங்கள் குடியிருந்தாலும் நிலங்கள் சொந்தமில்லை; சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்கிறார் ஜே.ஸ்ரீறங்கா

30 வருடங்கள் குடியிருந்தாலும் நிலங்கள் சொந்தமில்லை; சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்கிறார் ஜே.ஸ்ரீறங்கா

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 11:29 am

30 வருடங்களாக யார் குடியிருந்தாலும் அந்த நிலங்கள் அவர்களுக்கு சொந்தமில்லை என்ற சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டுவரமுயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீறங்கா குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு கொண்டுவரப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக வாக்களிக்குமாறு, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கும் ,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  ஜே.ஸ்ரீறங்கா வேண்டுகோள் விடுக்கின்றார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இடம்பெறும் உரைகளிலிருந்து தீர்வுகள் கிடைக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீறங்கா சுட்டிக்காட்டுகின்றார்.

எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்தி வைப்பு மீதான பிரேரணை, உரிய வகையில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்து, அக்ராசணம் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை உரிய நேரத்திற்கு முன்னர் நிறைவு செய்தது.

இதேவேளை, கோரம் இன்மையால்  நேற்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இதன்போது அக்ராசனத்தில் இருந்த முருகேசு சந்திரகுமார் மற்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்