யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்

யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்

யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 11:35 am

யாழ். சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பேக்கரி சந்தியில் நேற்றிரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளும், விசேட தேவையுடையவர் பயன்படுத்தும் துவிச்சக்கரவண்டியும் மோதியதில் இவர்கள் காயமடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்