முகத்துவாரம் கடலில் படகொன்று கவிழ்ந்ததில் இருவர் பலி

முகத்துவாரம் கடலில் படகொன்று கவிழ்ந்ததில் இருவர் பலி

முகத்துவாரம் கடலில் படகொன்று கவிழ்ந்ததில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 1:38 pm

கொழும்பு முகத்துவாரம் கடலில் படகொன்று கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த படகில் இருந்த மேலும் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காப்பாற்றப்பட்ட மீனவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த மீனவர்கள் பயணித்த படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கடல் அலையில் சிக்கிக் கவிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்