மஞ்சந்தொடுவாயில் சிறுமி துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

மஞ்சந்தொடுவாயில் சிறுமி துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

மஞ்சந்தொடுவாயில் சிறுமி துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 7:17 pm

மட்டக்களப்பு காத்தான்குடி – மஞ்சந்தொடுவாய் பகுதியில் எட்டு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அயலவர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட  குடையொன்றை வாங்கச் சென்ற சிறுமியே நேற்று மாலை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

சிறுமி நீண்டநேரம் வீடு திரும்பாததால் அயலவர்களின் உதவியோடு பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர்.

இதன்போது அருகிலிருந்த வீடொன்றினுள் உரப் பையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

சந்தேகநபர் பதியதலாவை பகுதியைச் சேர்ந்தவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[vimeo url=”https://www.youtube.com/watch?v=cw07rtP_CXc” width=”560″ height=”315″]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்