பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்; தமிழ்க் கூட்டமைப்புடனும் சந்திப்பு

பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்; தமிழ்க் கூட்டமைப்புடனும் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 5:14 pm

இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா லேவிஸ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் யுத்த கால பாதிப்புகள் குறித்து லாரா லேவிஸுக்கு இதன்போது தெளிவுபடுத்தியதாக மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மாவட்டத்தில் நிலவுகின்ற அரசில் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சந்திப்பின் போது இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லாரா லேவிஸூற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தெரிவிக்கின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்