தேர்தல் சட்டமீறல்கள் 205ஆக அதிகரிப்பு; மொனராகலையில் அதிக முறைப்பாடுகள்

தேர்தல் சட்டமீறல்கள் 205ஆக அதிகரிப்பு; மொனராகலையில் அதிக முறைப்பாடுகள்

தேர்தல் சட்டமீறல்கள் 205ஆக அதிகரிப்பு; மொனராகலையில் அதிக முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 6:16 pm

ஊவா மாகாண சபைத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 205ஆக அதிகரித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் இருந்து 131 முறைப்பாடுகளும் பதுளை மாவட்டத்தில் இருந்து 60 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இரண்டு மாவட்டங்களுக்கும் பொதுவான 14 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பதிவாகியுள்ள வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது.

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை, தேர்தல் பிரசார அலுவலகங்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலும் தேர்தல்கள் செயலகத்திற்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதேவேளை, ஊவா மாகாண சபைக்கான தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

கடந்த 4ஆம், 5ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றதுடன், அந்த இரண்டு தினங்களிலும் வாக்களிக்க முடியாதவர்களுக்கு இன்றைய தினமும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்