தடகள வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் கெலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை

தடகள வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் கெலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை

தடகள வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் கெலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 6:55 pm

தென்னாபிரிக்க தடகள வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் தனது காதலியை திட்டமிட்டு கொலை செய்தார் என்ற கருத்தை நீதிமன்றம் மறுத்துள்ளது .

ஒஸ்கார் பிஸ்டோரியஸ் மீதான வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

அரசுதரப்பு சட்டத்தரணிகள் தமது வாதங்களினூடாக ஒஸ்கார் பிஸ்டோரியஸ் தனது காதலியை திட்டமிட்டு கொலை செய்தார் என்பதை நிரூபிக்கத் தவறியுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றவியல் செயற்பாடொன்றில் ஈடுபடும் அளவுக்கு ஒஸ்கார் பிஸ்டோரியஸ் திறன் கொண்டவர் அல்லவெனவும் நீதிபதி தொகலி மஸிபா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஒஸ்கார் பிஸ்டோரியஸுக்கு எதிரான வழக்கில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக காணப்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் கொலையுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக   பிஸ்டோரியஸ் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமேயானால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்