சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 8:51 am

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா. டெனிஷ்வரன் தெரிவிக்கின்றார்.

வட மாகாண மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான ஆலாசனைக் குழு கூட்டத்தின் முதலாவது அமர்வில்  நேற்று  உரையாற்றியபோதே மாகாண அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

குறிப்பாக வட மாகாணத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களது வாழ்வாதார அபிவிருத்திக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனை குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

வடமாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர், மாகாணத்திலுள்ள அனைத்து கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்