கெஸ்பேவ நீதிமன்ற வளாகத்தில் சந்தேகநபர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

கெஸ்பேவ நீதிமன்ற வளாகத்தில் சந்தேகநபர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 1:22 pm

கெஸ்பேவ நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இரண்டு சந்தேகநபர்கள் மீது சிறைச்சாலைகள் அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு விளக்கமறியலில் இருந்து கெஸ்பேவ நீதிமன்றத்திற்கு இன்று ஆறு முக்கிய சந்தேகநபர்கள் அழைத்துச்செல்லப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலை பஸ்சில் இருந்து சந்தேகநபர்கள் இறங்கியபோது அவர்களில் இருவர் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர்.

இதன்போது சந்தேகபர்கள்மீது சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

வழிப்பறிக்கொள்ளை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகபர்கள் இருவரே தப்பிச் செல்ல முயற்சித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்