மஞ்சந்தொடுவாயில் எட்டு வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை

மஞ்சந்தொடுவாயில் எட்டு வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 7:55 am

மட்டக்களப்பு காத்தான்குடி – மஞ்சந்தொடுவாய் பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணாமற்போயிருந்ததாக கூறப்படும் சிறுமி உரப் பையில் கட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை பாழடைந்த வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பதியலாவை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்