இனப் பிரச்சினை தீர்விற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கே ஜனாதிபதி முன்வர வேண்டும்

இனப் பிரச்சினை தீர்விற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கே ஜனாதிபதி முன்வர வேண்டும்

இனப் பிரச்சினை தீர்விற்கான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கே ஜனாதிபதி முன்வர வேண்டும்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 7:31 pm

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை விடுத்து, இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே ஜனாதிபதி முன்வர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அதனை அமுல்படுத்த வேண்டியது ஜனாதிபதியின் கடமையாக உள்ளதால், அதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிடுகின்றார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாட திறந்த மனதுடன் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்த தகவல் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவியபோதே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடு குறித்து தி ஹிந்து பத்திரிகையின் இராஜதந்திர மற்றும் செயல்நுணுக்க விவகாரங்களுக்கான ஆசிரியர் சுஹாசினி ஹைடர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் நேற்று இந்த தகவலை பதிவுசெய்திருந்தார்.

பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசியல் யாப்பிற்கு ஏற்புடையதாக அமுல்படுத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாட தயாராக இருப்பதாக தன்னுடனான நேர்காணலில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்