ஆர்னல்டின் ஆசையை நிறைவேற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி

ஆர்னல்டின் ஆசையை நிறைவேற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி

ஆர்னல்டின் ஆசையை நிறைவேற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 4:27 pm

சங்கரின் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகைத் தர ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிரபல ஹொலிவுட் நடிகர் ஆர்னல்டின் ஆசையை நிறைவேற்றுகிறார் ரஜினி.

ஷங்கரின் ‘ஐ’ பட இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக ஆர்னல்ட் கலந்து கொள்கிறார். பொலிவுட்டிலிருந்து அமிதாப் பச்சனும் பங்கேற்கிறார்.

இந்த விழாவில் ரஜினி கலந்துகொள்ள வேண்டும் என இயக்குநர் சங்கர் பெரிதும் விரும்பினார். அதுமட்டுமல்ல, ஆர்னல்ட் ஒருமுறை, இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு மேடையில் தோன்ற ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் ரஜினியைச் சந்தித்த சங்கர் இதையெல்லாம் அவரிடம் கூறி விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த ரஜினி, இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்