ஆசிய வலைப்பந்தாட்டம்; இலங்கைக்கு மூன்றாவது வெற்றி

ஆசிய வலைப்பந்தாட்டம்; இலங்கைக்கு மூன்றாவது வெற்றி

ஆசிய வலைப்பந்தாட்டம்; இலங்கைக்கு மூன்றாவது வெற்றி

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 8:38 am

ஆசிய வலைப்பந்தாட்டத்தில் இலங்கை தனது மூன்றாவது போட்டியிலும் வெற்றியீட்டியுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பி குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை தனது மூன்றாவது போட்டியில் நேற்று புரூணை அணியை எதிர்கொண்டது.

போட்டியில் முதல் பகுதியில் 40 க்கு 9 எனும் கோல் கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றிருந்தது.

இரண்டாம் பகுதியில் இலங்கை 85 கோல்களையும், புரூணை 38 கோல்களையும் போட்டன.

அதன்படி போட்டியில் 125 க்கு 78 எனும் கோல்கள் பிரகாரம் இலங்கை அணி வெற்றிபெற்றது.

தொடரில் இதற்கு முன்னைய போட்டிகளில் சீனத் தாய்பே மற்றும் மியன்மார் ஆகிய அணிகளை இலங்கை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்