அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்; இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தி

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்; இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தி

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்; இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 9:42 am

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்  இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகிறது.

அல்கெய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவை பழிவாங்க 4 விமானங்களை கடத்தினர். அதில் 2 விமானங்கள் நியூயோர்க்கின் இரட்டைக் கோபுர 100 மாடி கட்டிடத்தில் மோதி அதனைத் தகர்த்தன. ஒரு விமானம் பென்டகன் மீதும் மற்றொரு விமானம் தரையிலும் விழுந்தது.

4 விமானங்களில் இருந்த  19 பேரும் பலியானார்கள். நியூயோர்க் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் தீப்பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொருங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொருங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்