அப்பிள் நிறுவனம் ‘iPhone 6′ மற்றும் ‘iPhone 6+; அறியவேண்டிய தகவல்கள்(Video & Photos)

அப்பிள் நிறுவனம் ‘iPhone 6′ மற்றும் ‘iPhone 6+; அறியவேண்டிய தகவல்கள்(Video & Photos)

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2014 | 12:05 pm

அப்பிள் நிறுவனம் ‘iPhone 6′ மற்றும் ‘iPhone 6+’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐஃபோன் விரும்பிகளின் பல நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஐஃபோன் வகைகளை அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Apple-new-iphone

iPhone 6′ மற்றும் ‘iPhone 6+  எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவை, முந்தைய ஐஃபோன்கள் திரையைவிட பெரிய திரையைக் கொண்டுள்ளது. முந்தைய தொலைபேசிகளை விட மெலிதாக உள்ளது.

இந்தப் புதிய கைத்தொலைபேசிகள் சம்சங் நிறுவன கைத்தொலைபேசிகளுக்கு போட்டியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதோடு, நீண்ட காலமாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்பார்த்த, கையில் அணிந்துகொள்ள வாகான அப்பிள் வாட்ச், புதிய ஐஃபோன்களோடு அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.
apple-will-start-producing-the-big-screen-iphone-6-in-july
காலிபோர்னியா, பிளிண்ட் சென்டரில், 30 வருடங்களுக்கு முன் மெக் கணனி அறிமுகம் செய்யப்பட்ட அதே இடத்தில், புதிய ஸ்மார்ட் போன்களும், கைகட்டிகாரமும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

16 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 6, 199 டொலர்களுக்கும், அதிகபட்சமாக 128 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 399 டொலர்களுக்கும் விற்கப்படவுள்ளது. 16 ஜிபி ஐஃபோன் 6 ப்ளஸின் விலை 299 டொலர்களாகவும், அதிகபட்சமாக 128 ஜிபி ஐஃபோன் ப்ளஸ் விலை 499 டொலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கைத்தொலைபேசிகள் வரும் செப்டம்பர் 19-ஆம் திகதி முதல் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 6 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வருகிறது. செப்டம்பர் 12 முதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

iPhone 6 திரையின் நீளம் 4.7 இன்ச், iPhone 6+ திரையின் நீளம் 5.5 இன்ச். முந்தையை ஐஃபோன் மொடலாக 5 எஸ், 7.6 மி.மீ தடிமன் கொண்டது. ஆறாம் தலைமுறை ஐஃபோன் மொடலாக 6, 6.9 மி.மீட்டரும், 6 ப்ளஸ் 7.1 மீட்டர் தடிமனும் கொண்டது.

8 மெகா பிக்ஸல் கமரா கொண்ட ஐஃபோன் 6, செல்பி எடுத்துக் கொள்பவர்களுக்கு வசதியாக, முகங்களை சரியாக கண்டுணரும் அம்சத்தைக் கொண்டுள்ளது.

இந்த முறை, முக்கியமாக அப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்பிள் பே மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும்.

இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் வீசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று டிம் குக் தெரிவித்தார்.

நன்றி:- இந்து


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்