முதல் டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி

முதல் டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி

முதல் டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 12:25 pm

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கட்டுக்களால் அபார வெற்றியீட்டுள்ளது

மேற்கிந்திய தீவுகளின் கிங்கஸ்டவுனில் நடைபெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து

இதனடிப்படையில் தனது முதல் இனிங்ஸில் துடுப்படுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 484 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் கிரேக் பரத் வைட் தனது கன்னி இரட்டைச்  சதத்தை பூர்த்தி செய்தார்

தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய  பங்களாதேஸ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றதுடன் பலோ ஒன் முறையில் இரண்டாம் இனிங்ஸில் 314 ஓட்டங்களைப் பெற்றது.

இதற்கமைய 13 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றியை உறுதி செய்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்