பிரதம செயலாளரை கட்டுப்படுத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது – சி.வி.கே.சிவஞானம்

பிரதம செயலாளரை கட்டுப்படுத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது – சி.வி.கே.சிவஞானம்

பிரதம செயலாளரை கட்டுப்படுத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது – சி.வி.கே.சிவஞானம்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 7:13 pm

மாகாண நிர்வாக விடயங்களில் பிரதம செயலாளரை கட்டுப்படுத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளதாக வட மாகாண தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவிக்கின்றார்.

வட மாகாண சபையின் இன்றைய அமர்வின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாணத்தின் அனைத்து நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாகவும் மாகாண செயலாளரை நெறிப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் முதலமைச்சருக்கு சட்ட ரீதியாக உரிமையும் அதிகாரமும் உள்ளதாக மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சபையில் சுட்டிக்காட்டினார்.

முதலைமைச்சரை தடுக்கும் விடயங்கள் எதுவும் சட்டத்தில் இல்லை எனவும் சேவையின் கடப்பாடுகள் தொடர்பாகவே அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபையின் நாளாந்த செயற்பாடுகள் தொடர்பாக அதில் தெரிவிக்கப்படவில்லை எனவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்