பாகிஸ்தானிய போர் விமானங்கள் தாக்குதல்; 35 தலிபான்கள் பலி

பாகிஸ்தானிய போர் விமானங்கள் தாக்குதல்; 35 தலிபான்கள் பலி

பாகிஸ்தானிய போர் விமானங்கள் தாக்குதல்; 35 தலிபான்கள் பலி

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 12:45 pm

பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 35 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுக்காப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வஷிரிஸ்டான் பகுதி, தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல்களை  தீவிரப்படுத்தியுள்ள பாகிஸ்தான், விமானத் தாக்குதல்களையும் முன்னெடுத்துள்ளது.

நேற்றைய தினம் பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிவிலியன், 6 தலிபான்கள் மற்றும் ஒரு இராணுவ வீரர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்