நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 9:20 am

நாடளாவிய ரீதியில் நுளம்பு ஒழிப்பு வாரமொன்று இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இந்த வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவிக்கின்றார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகம் காணப்படுகின்ற மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் இன்று முதல் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் தொற்று நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்புப் பிரிவின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்