நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 6:53 pm

குற்றச் செயல்களில் பலியாக்கப்பட்டோருக்கும், சாட்சியாளர்களுக்கும் உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கும் விதிமுறைகளை உருவாக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் சமர்ப்பித்துள்ளார்.

குற்றச் செயல்களில் பலியாக்கப்பட்டோரினதும், சாட்சியாளர்களினதும் பாதுகாப்பிற்கான அதிகார சபையை ஸ்தாபிப்பதற்கு இந்த சட்டமூலத்தின் ஊடாக வழியேற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

குற்றச் செயல்களில் பலியாக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களின் உரிமைகளையும், உரித்துடைமைகளையும் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்குமான விதிமுறைகளும் இந்த சட்டமூலம் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்