குருநாகலில் 4 வயது சிறுமி கடத்தல்; 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு

குருநாகலில் 4 வயது சிறுமி கடத்தல்; 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு

குருநாகலில் 4 வயது சிறுமி கடத்தல்; 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 9:25 am

குருநாகல், நிகதலுபொத, பன்னவ பகுதியிலுள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும், 4 வயது சிறுமியை தேடி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட சிறுமியின் தந்தை உள்ளிட்ட 10 பேரிடன் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்