கிளிநொச்சி நகரில் எட்டு கடைகளின் பூட்டுக்கள் உடைப்பு; ஆடைகளும் திருடப்பட்டுள்ளன

கிளிநொச்சி நகரில் எட்டு கடைகளின் பூட்டுக்கள் உடைப்பு; ஆடைகளும் திருடப்பட்டுள்ளன

கிளிநொச்சி நகரில் எட்டு கடைகளின் பூட்டுக்கள் உடைப்பு; ஆடைகளும் திருடப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 2:45 pm

கிளிநொச்சி நகரிலுள்ள எட்டு கடைகளின் பூட்டுக்கள் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையிலுள்ள எட்டு கடைகளின் பூட்டுகள் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது ஒரு கடையில் இருந்த ஆடைகள் சிலவும் திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்

இந்த முறைப்பாட்டிற்கு அமைய பொதுச் சந்தையிலிருந்த இரண்டு காவலாளிகளிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்