ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்; பிரேரணை நிறைவேற்றம்

ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்; பிரேரணை நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 7:03 pm

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற பிரேரணை இன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் இந்தப்  பிரேரணை கொண்டுவரப்பட்டது.

வட மாகாண சபையின் 15ஆவது அமர்வு கைதடியிலுள்ள வட மாகாண சபை கட்டடத் தொகுதியில் இன்று காலை ஆரம்பானது.

கடந்த அமர்வுகளின் போது, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் இரண்டு பிரேரணைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த இரண்டு பிரேரணைகளும் இன்றைய அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு பிரேரணை மாத்திரமே இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மற்றைய பிரேரணை அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விசாரணைக்குழுவிற்கு நாட்டிற்குள் வருகைத் தந்து விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியினை வழங்குமாறு எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் மற்றுமொரு பிரேணை கொண்டு வரப்பட்டது.

எனினும் இந்தப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி உறுப்பினரான எஸ்.தவநாதன் எதிர்ப்பை தெரிவித்தார்.

இந்த நிலையில், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை, மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் வழிமொழிந்தார்.

இதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்