எட்டு மாத சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினார் மைக்கல் ஷூமாக்கர்

எட்டு மாத சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினார் மைக்கல் ஷூமாக்கர்

எட்டு மாத சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினார் மைக்கல் ஷூமாக்கர்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 3:15 pm

பனிச்சறுக்கு விளையாட்டின்போது தலையில் படுகாயம் அடைந்து கோமா நிலையில் இருந்த முன்னாள் பார்மியுலா வன் கார் பந்தய வீரர் மைக்கல் ஷூமாக்கர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து கிரனோபல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் 6 மாதங்களாக கோமாவில் இருந்தார். கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி கோமாவில் இருந்து மீண்ட அவரை சுவிட்ஸர்லாந்திற்கு கொண்டு சென்றனர்.

சுவிட்ஸர்லாந்திலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஷூமாக்கர்,  3 மாத சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது தற்போதைய உடல்நிலை தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

ஆறு மாதங்களாக கோமாவில் இருந்த அவருக்கு சாப்பிட, கை, கால்களை அசைக்க, நடக்க கற்றுக் கொடுக்கவே பல மாதங்கள் ஆகுமென வைத்தியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்