ஊவா மாகாண சபைத் தேர்தல்; தபால் மூலம் வாக்களிக்க நாளை இறுதி சந்தர்ப்பம்

ஊவா மாகாண சபைத் தேர்தல்; தபால் மூலம் வாக்களிக்க நாளை இறுதி சந்தர்ப்பம்

ஊவா மாகாண சபைத் தேர்தல்; தபால் மூலம் வாக்களிக்க நாளை இறுதி சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 2:34 pm

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான இறுதி சந்தர்ப்பம் நாளை வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த நான்காம் ஐந்தாம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாமற்போன அரச ஊழியர்கள் அந்தந்த மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலகங்களிலும், கொழும்பு மாவட்ட வாக்காளர்கள் தேர்தல்கள் செயலகத்திலும் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் செயலகம் வலியுறுத்தியுள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பிலான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்காக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்டுடன் தொடர்பினை ஏற்படுத்தினோம்.

இதேவேளை, ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான இரண்டு முக்கிய கலந்துரையாடல்கள் தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளன.

ஊவா மாகாண தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்