உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று; தற்கொலை வீதத்தில் உலகிலேயே நான்காவது இடத்தில் இலங்கை

உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று; தற்கொலை வீதத்தில் உலகிலேயே நான்காவது இடத்தில் இலங்கை

உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று; தற்கொலை வீதத்தில் உலகிலேயே நான்காவது இடத்தில் இலங்கை

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 9:35 am

உலக தற்கொலை தடுப்பு தினம் இன்றாகும்.

தற்கொலையை தடுப்பதற்கு உலகளாவிய ரீதியில் அர்ப்பணிப்பை ஏற்படுத்துதல் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை இலக்காக கொண்டு இந்த தினம் ஒவ்வொரு வருடமும் செம்டெம்பர் மாதம் 10ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது.

தற்கொலை தடுப்புக்கான சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்தத் தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தன.

ஒவ்வொரு ஆண்டும் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை மூலம் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்தாபனத்தின் இந்த அறிக்கையின் மூலம் 40 செக்கன்களுக்கு ஒருவர் தற்கொலை செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளிலேயே தற்கொலை மூலமான உயிரிழப்புக்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.

தற்கொலை எந்தவொரு வயதினரும் தூண்டப்படலாம் என்பதுடன் உலகளாவிய ரீதியில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் நடத்திய ஆவ்வொன்றின் இலங்கை தற்கொலை வீதத்தில் உலகிலேயே நான்காவது இடத்தில் உள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் வருடாந்தம் மூவாயிரம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, எந்தவொருப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாக அமையாது என விசேட உளநல வைத்திய அதிகாரி எம்.கணேசன் சுட்டிக்காட்டுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்