இலங்கைக்கு ஆலோசனை வழங்கிய சுப்ரமணிய சுவாமிக்கு அழைப்பாணை

இலங்கைக்கு ஆலோசனை வழங்கிய சுப்ரமணிய சுவாமிக்கு அழைப்பாணை

இலங்கைக்கு ஆலோசனை வழங்கிய சுப்ரமணிய சுவாமிக்கு அழைப்பாணை

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 6:49 pm

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சுப்ரமணியம் சுவாமிக்கு எதிராக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் சுப்ரமணிய சுவாமி அண்மையில் தெரிவித்த கருத்திற்கு எதிராக கடந்த 8ஆம் திகதி தமிழக முதலமைச்சரினால் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய படகுகளை பறிமுதல் செய்யுமாறு  இலங்கை அரசுக்கு தாம் ஆலோசனை வழங்கியதாக அண்மையில் இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது சுப்ரமணியம் சுவாமி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்