இபோலா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இபோலா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இபோலா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 12:19 pm

இபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இபோலா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,293 ஆகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொற்று நோய்கள் பிரிவின் தலைமை அதிகாரி சில்வியா ப்ராயன்ட் குறிப்பிடுகின்றார்.

2,293 பேர் மரணமடைந்துள்ள நிலையில் இபோலா வைரஸை ஒழிப்பதற்கான போராட்டத்தில் வெற்றிபெற சில காலங்கள் செல்லும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று வாரங்களுக்குள் லைபீரியாவில் இபோலா தொற்றினால் 60 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கினியாவில் 39 வீதமாகவும் சியராலியோனில் 29 வீதமாகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்