அப்பிள் கைக்கடிகாரம் (Apple Watch) அறிமுகம் (Video & Photos)

அப்பிள் கைக்கடிகாரம் (Apple Watch) அறிமுகம் (Video & Photos)

அப்பிள் கைக்கடிகாரம் (Apple Watch) அறிமுகம் (Video & Photos)

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2014 | 11:23 am

அப்பிள் கைக்கடிகாரத்தை (Apple Watch)  அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை அனைவரும் அப்பிளின் ரசிகர்களாக மாறிவரும் நிலையில், நேற்றைய தினம் iPhone 6 மற்றும் iPhone 6+யினை அறிமுகப்படுத்தியது அப்பிள்.

watch11

அப்பிள் அறிமுகப்படுத்திய அனைத்து உற்பத்திகளும் வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்பிள் கைக்கடிகாரங்களும் பெரும் வரவேற்பை பெருமென நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் டிம் குக் தெரிவித்துள்ளார்.

இக்கைக்கடிகாரம் 1.5 அங்குலத்தில் தொடு திரை வசதியுடன் ப்ளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

watch15

இக்கைக்கடிகாரத்தினை ப்ளூடூத் மூலம் iPhone 5, 5C, 5S, 6 மற்றும் 6+ ஆகியவற்றுடன் இணைக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த கடிகாரம் விற்பனைக்கு வரவுள்ளது.

watch17

IOS மூலம் இக்கடிகாரம் இயங்குமெனவும் இதனூடாக அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறு வகையான வடிவங்களில், இலகுவாக கழற்றி மாட்டக்கூடிய வகையிலான பட்டியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கைக்கடிகாரம்.

watch4

மேலும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் (stainless steal) அலுமினியம் (aluminium Watch Sport ) மற்றும் 18 கரட் தங்கம் ஆகிய மூன்று உலோகங்களில் அப்பிள் கைக்கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்