யாழ். புத்தூரில் பஸ் குடைசாய்ந்தது; ஒருவர் பலி, 10 பேர் காயம்

யாழ். புத்தூரில் பஸ் குடைசாய்ந்தது; ஒருவர் பலி, 10 பேர் காயம்

யாழ். புத்தூரில் பஸ் குடைசாய்ந்தது; ஒருவர் பலி, 10 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 10:13 pm

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் பஸ் ஒன்று குடைச்சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10ற்கும் அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.

குடைசாய்ந்துள்ள பஸ்ஸில் சிக்கியுள்ள பயணி ஒருவரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே  விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த மார்க்கத்தில் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதி பத்திரமின்றி பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறுக்கு வீதியில் பயணித்த போதே பஸ் குடைசாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்