மொனராகலையில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள்மீது தாக்குதல்

மொனராகலையில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள்மீது தாக்குதல்

மொனராகலையில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள்மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 1:44 pm

மொனராகலையில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று காலை 6.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

இதன்போது ஒருவரை கடத்திச் செல்லவும் முயற்சிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, தேர்தல் பாதுகாப்பு கடமையில் 11,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது

தேர்தல் தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்