மூன்று ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது இங்கிலாந்து

மூன்று ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது இங்கிலாந்து

மூன்று ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது இங்கிலாந்து

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 9:41 am

கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கெதிரான சர்வதேச இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களால் மயிரிழையில் வெற்றிபெற்றுள்ளது.

பேமின்ஹேமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 181 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி 20 ஒவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.

193381
விராட் ஹோலி 66 ஓட்டங்களையும் ஷீக்கர் தவான் 33 ஓட்டங்களையும் பெற்றதுடன் இங்கிலாந்து அணியின் நான்கு பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணித் தலைவர் இயோர்ன் மோர்கன் 71 ஓட்டங்களையும் அலக்ஸ் ஹேல்ஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மொஹமட் சமி அஹமட் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக இயோர்ன் மோர்கன் தெரிவுசெய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்